உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புத்தக காட்சி - நுால் அறிமுகம்

புத்தக காட்சி - நுால் அறிமுகம்

அந்த 15 நாட்கள்சுதந்திர பாரதம் பிறக்கும் தருணத்தில்…ஆசிரியர்: பிரசாந்த் போள்பக்கம்: 168, விலை: ரூ. 200.வெளியீடு: விஜயபாரதம் பிரசுரம்-நாடு சுதந்திரம் பெறுவதற்கு 15 நாள் முன், நாட்டின் கிழக்கிலும், மேற்கிலும் நடந்த வன்முறைகள், படுகொலைகள், பேரழிவுகள் பற்றிய வரலாற்று உண்மைகளை பேசுகிறது இந்நுால். ஆக., 15ல் காங்., தலைவர்கள் பதவியை எதிர்பார்த்து, டில்லிக்கு படையெடுத்துச் சென்றது உட்பட பல தகவல்களை சேர்த்துள்ளது.பிருதிவிராஜனின் குதிரைஆசிரியர்: மனோஜ் தாஸ்தமிழில்: இளம்பாரதிபக்கம்: 184, விலை: ரூ.220வெளியீடு: அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்ஒடிசா, ஆங்கிலம் மொழிகளில் எழுதி புகழ்பெற்றவர் மனோஜ் தாஸ். பத்ம பூஷண் மற்றும் சாகித்ய அகாடமி விருதுகளைப் பெற்ற இவர், சிறுகதை, நாவல், பயண நுால், கவிதை, வரலாறு என பல புத்தகங்கள் எழுதியுள்ளார். இதில், பிருதிவிராஜனின் குதிரை, ஆந்தை, இலக்கு, சிலை சிதைப்பவர்கள் வருகிறார்கள் உள்ளிட்ட சிறுகதைகளை சுவாரஸ்யத்துடன், வரலாறு துணுக்குகளை கோர்த்து வழங்கியுள்ளார். இளம்பாரதியின் மொழிபெயர்ப்பு நன்று.-கீழாநிலைக்கோட்டைக் கிளிகள்ஆசிரியர்: தாமரை ஹரிபாபுபக்கம்: 286, விலை: ரூ. 300வெளியீடு: மணிமேகலை பிரசுரம்-மகப்பேறு மருத்துவரான டாக்டர் தாமரை ஹரிபாபு எழுதியுள்ள சரித்திர நாவலான இது, 1545, மே 21ல் துவங்குகிறது. கதை, கோட்டை, கொத்தளங்களில் நுழைந்து, சேர, சோழ, பாண்டிய நாடுகளில் பயணித்து, இலங்கை, மலேசியாவுக்கும் சென்று, சமயம், தத்துவம் உள்ளிட்டவற்றை அலசுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ