உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சூடான டீ கொட்டி சிறுவன் காயம்

சூடான டீ கொட்டி சிறுவன் காயம்

படப்பை: படப்பை அருகே காஞ்சிவாக்கம் பகுதியை சேர்ந்த வரதராஜன் மகன் சாய்பிரசாத், 4; சிறுவனின் பெற்றோர், நேற்று சூடாக டீ அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது, விளையாடி கொண்டிருந்த சாய்பிரசாத், டீ டம்ளர் மீது விழுந்தான். அதனால், சிறுவனின் உடலில் சூடான டீ பட்டு, உடல் வெந்து காயம் ஏற்பட்டது. சாய்பிரசாத்தை மீட்டு, எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, 22 சதவீத காயங்களுடன், சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் குறித்து, படப்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ