உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காரில் வந்து பேட்டரி திருடிய சிறுவர்கள் கைது

காரில் வந்து பேட்டரி திருடிய சிறுவர்கள் கைது

காரில் வந்து பேட்டரி திருடிய சிறுவர்கள் கைது கண்ணகி நகர்: கண்ணகி நகர், எழில் நகரைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன், 55; ஆட்டோ ஓட்டுநர். நேற்று அதிகாலை, பேட்டரி காரில் வந்த ஐந்து பேர், கமலக்கண்ணன் உள்ளிட்ட பலரின் வாகனத்தில் இருந்து, பேட்டரிகளை திருடினர். சத்தம் கேட்டு, பகுதிவாசிகள் ஐந்து பேரையும் மடக்கி பிடிக்க முயன்றனர்.அவர்கள் தப்பி ஓட முயற்சி செய்தனர். விடாமல் துரத்தியதில், ஐந்து பேரும் சிக்கினர். அவர்களை, கண்ணகி நகர் போலீசில் ஒப்படைத்தனர். தப்பி செல்ல முயன்றபோது, கீழே விழுந்ததில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். விசாரணையில், ஓ.எம்.ஆர்., ஒக்கியம்பேடு பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன், 20, மற்றும் நான்கு சிறுவர்கள் என தெரிந்தது. அவர்கள், 9 மற்றும் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !