பூட்டிய வீட்டுக்குள் புகுந்து வெள்ளி பொருட்கள் திருட்டு
பெரம்பூர்:பெரம்பூரை சேர்ந்தவர் பத்மநாபன், 68. இவர், ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது இரண்டாவது மகளுக்கு குழந்தை பிறந்த நிலையில், அவர்களை கவனித்துக் கொள்ள, பத்மநாபனின் மனைவி மகள் வீட்டுக்கு சென்றுள்ளார்.வீட்டில் பத்மநாபன் மட்டும் தனியே இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் பிரதான கதவை சார்த்திவிட்டு துாங்கியுள்ளார்.நேற்று காலை கண்விழித்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து இருந்தது கண்டு அதிர்ந்துள்ளார்.வீட்டில் இருந்த பொருட்களை பார்த்த போது, பூஜையறையில் இருந்த வெள்ளி பொருட்கள், இரண்டு மொபைல் போன்கள் காணாமல் போயிருந்தன.இதுகுறித்து, செம்பியம் காவல் நிலையத்தில் பத்மநாபன் புகார் அளித்தார். விசாரணையில், உள்பக்கமாக பூட்டிய கதவின் தாழ்ப்பாளை திறந்த மர்மநபர், வீட்டுக்குள் நுழைந்து கைவரிசை காட்டியது தெரிந்தது.செம்பியம் போலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வருகின்றனர்.