ஆசிய வாள்வீச்சு தமிழக வீரருக்கு வெண்கலம்
சென்னை இந்திய வாள்வீச்சு சங்கம், ஆசிய வாள்வீச்சு கூட்டமைப்பு இணைந்து, ஆசிய 'கேடட்' கோப்பைக்கான வாள்வீச்சு போட்டியை, உத்தரகண்ட் மாநிலத்தில், கடந்த 19ல் துவங்கி, 22ம் தேதி வரை நடத்தின. இதில், இந்தியா சார்பில், தமிழக வாள்வீச்சு சங்கத்தை சேர்ந்த, 10 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். தமிழக வீரரான கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த பெஜினோ ஸ்டெபின் மட்டும், 'எப்பி' ஆயுதப் பிரிவில், வெண்கல பதக்கம் வென்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்.