மேலும் செய்திகள்
நெஞ்சு வலியால் ஜோதிடர் சாவு
23-Jun-2025
எம்.கே.பி.நகர், சொத்து தகராறில், தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணனை, போலீசார் கைது செய்தனர்.வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ஜான்பீட்டர், 28; தனியார் நிறுவன ஊழியர். இவரது அண்ணன் ரமேஷ், 36. இருவருக்கும் வீட்டை பங்கு பிரிப்பதில் தகராறு இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று, ஜான்பீட்டருக்கும், அவரது அண்ணன் ரமேஷுக்கும் இடையே, சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரமேஷ் தகாத வார்த்தைகளால் பேசி, வீட்டில் இருந்த கண்ணாடியை உடைத்து, ஜான்பீட்டரின் முகத்திலும், கையிலும் வெட்டினார்.படுகாயமடைந்த ஜான்பீட்டரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். எம்.கே.பி.நகர் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து, ரமேைஷ கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
23-Jun-2025