மேலும் செய்திகள்
கன்று குட்டியை தாக்கி கொன்ற புலியால் அச்சம்
26-Jul-2025
திருவல்லிக்கேணி:திருவல்லிக்கேணியில் உள்ள, மாதங்கீஸ்வரி கோவிலில் பலியிட இருந்த எருமை கன்று மீட்கப்பட்டது. சமூக வலைதளத்தில், 'டிவி' சீரியல் நடிகை சந்தியா 'வீடியோ' ஒன்றை வெளியிட்டார். அதில், 'நேற்று காலை, 11:00 மணியளவில், திருவல்லிக்கேணி ராம் நகர், நடேசன் சாலையில் உள்ள, மாதங்கீஸ்வரி கோவில் திருவிழாவில் எருமை கன்று ஒன்றை பலியிட இருக்கிறார்கள். தயவு செய்து அதை பலியிட வேண்டாம். அதற்கான பணம் எவ்வளவோ தந்து விடுகிறேன்' என, கூறியிருந்தார். எருமை கன்றை வேனில் ஏற்றிச்செல்லும் காட்சியையும் வெளியிட்டு இருந்தார். இதையடுத்து, விலங்குகள் நல ஆர்வலர் சாய் விக்னேஷ் மற்றும் இவரது நண்பர்கள் அந்த எருமை கன்றை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எருமை கன்று பலியிட இருப்பது பற்றி, ஐஸ்ஹவுஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, சம்பந்தப்பட்ட கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். போலீசார் எருமை கன்றை மீட்டு, சென்னை புதுப்பேட்டையில் உள்ள மாநகராட்சி காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
26-Jul-2025