உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குண்டும், குழியுமாக- -மணிமங்கலம் சாலை

குண்டும், குழியுமாக- -மணிமங்கலம் சாலை

குன்றத்துார்:தாம்பரம் அருகே, முடிச்சூர் - --மணிமங்கலம் சாலையை பயன்படுத்தி, மணிமங்கலம் சுற்றுப்புறத்தில் உள்ள கோவில், பள்ளி, கல்லுாரிகள், குடியிருப்பு பகுதிகளுக்கு, ஏராளமானோர் செல்கின்றனர்.இந்த சாலையில், கடந்த ஆண்டு பள்ளம் தோண்டி, இயற்கை எரிவாயு குழாய் பதிக்கப்பட்டது. குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்ததும், அங்கு மீண்டும் சாலை முறையாக சீரமைக்கப்பட்டது. எனினும், கடந்த வடகிழக்கு பருவமழையின் போது, முடிச்சூரில் இருந்து மணிமங்கலம் நோக்கி செல்லும் சாலையில், பல இடங்களில் சேதமாகி குண்டும், குழியுமாக உள்ளது.இதனால், இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். இந்த சாலையில் சேதமான பகுதிகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை