உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 5 மாதத்திற்கு பின் சிக்கிய வழிப்பறி திருடர்கள்

5 மாதத்திற்கு பின் சிக்கிய வழிப்பறி திருடர்கள்

பெரம்பூர், நேபாளம் நாட்டைச் சேர்ந்தவர் மதப்கானல், 29; கட்டட தொழிலாளி. கடந்தாண்டு ஆக., 17ம் தேதி இரவு 9:00 மணியளவில், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே மது அருந்தி கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த மூவர், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் இல்லை என்றதும், கையில் வைத்திருந்த பிளேடால், மதப்கானலை மூவரும் தாக்கினர். இதில் அவருக்கு கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. மேலும், அவரதுபாக்கெட்டில் இருந்து 4,000 ரூபாய், மொபைல்போனை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், ஐந்து மாதத்திற்கு பின், வழிப்பறியில் ஈடுபட்ட பெரியார் நகரைச் சேர்ந்த மனோஜ், 19, வியாசர்பாடியைச் சேர்ந்த சிவபிரசாத், 18, ஆகியோர் சிக்கினர். போலீசார் அவர்களை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை