உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் சிரமத்திற்கு ஆளாகும் பஸ் ஓட்டுனர்கள்

சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் சிரமத்திற்கு ஆளாகும் பஸ் ஓட்டுனர்கள்

சென்னை, கோபாலபுரம், கான்ரான் ஸ்மித் சாலையில், இருபுறமும் ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அரசு பேருந்து ஓட்டுனர்கள் தினமும் மிகுந்த சிரமத்துடனே இச்சாலையை கடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட கோபாலபுரத்தில், கான்ரான் ஸ்மித் சாலை உள்ளது. இச்சாலையில் தனியார் மருத்துவமனை, வணிக நிறுவனங்கள், அரசு - தனியார் பள்ளிகள், குடிநீர் வாரிய அலுவலகம், போலீஸ் குடியிருப்பு என, ஏராளமானவை உள்ளன. ஆனால் அவற்றில், பெரும்பாலானவற்றிற்கு வாகனம் நிறுத்துவதற்கான இடம் இல்லாததால் சாலையிலும், நடைபாதையை ஆக்கிரமித்தும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.இதனால், தினமும் அவ்வழியாகச் செல்லும் அரசு பேருந்து ஓட்டுனர்களும், உணவு வாணிப கழகத்திற்கு வரும் லாரி ஓட்டுனர்களும், மிகுந்த சிரமத்துடனே இச்சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளது.மேலும் இச்சாலையில், இரண்டு இடங்களில் மரங்கள் சாய்ந்த நிலையில் உள்ளதால், அரசு பேருந்து ஓட்டுனர்கள் சாலை நடுவே மட்டுமே இயக்க முடியும்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை