உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 1.99 லட்சம் வாக்காளர்களுக்கு கணக்கீடு படிவம்

1.99 லட்சம் வாக்காளர்களுக்கு கணக்கீடு படிவம்

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னையில், 40.04 லட்சம் வாக்காளர்களின், விபர பட்டியல் சிறப்பு திருத்த பணி நடந்து வருகிறது. வீடு பூட்டியிருந்தாலும், பூர்த்தி செய்த படிவங்களை பெற, மூன்று, நான்கு முறை அலுவலர்கள் செல்வர். வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட, இரண்டு படிவத்தில் ஒன்றை வைத்து கொண்டு, மற்றொன்றை அலுவலரிடம் வழங்க வேண்டும். இப்பணி, டிச., 4 வரை நடைபெறுவதால், பொதுமக்கள் பதற்றமின்றி, படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். சந்தேகம் இருந்தால், 044 - 2561 9523 மற்றும் 1950 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை