உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கார் மோதி விபத்து இருதரப்பு மோதல் 

கார் மோதி விபத்து இருதரப்பு மோதல் 

பேசின்பாலம், ஆவடி, நியூ வெள்ளானுாரைச் சேர்ந்தவர் குடுபாய், 66. நேற்று மதியம், சூளை பகுதியில் அவரது அண்ணன் மகளின் திருமணம் நடந்தது.ஏற்கனவே குடுபாய், மண்டபத்திற்கு சென்ற நிலையில், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் காரில் மண்டபத்துக்கு வந்து கொண்டிருந்தனர். காரை அவரது மகன் சமீர் பாஷா ஓட்டினார்.டிமிலோஸ் சாலை, ஹஜ் கட்டட சந்திப்பில், சமீர் பாஷா காரை திருப்ப முயன்றபோது, அவ்வழியாக வந்த மற்றொரு கார், அவர்கள் சென்ற கார் மீது மோதி 'பம்பர்' உடைந்தது.அதிர்ச்சி அடைந்த சமீர் பாஷா, எதிரில் கார் ஓட்டி வந்த கொடுங்கையூரைச் சேர்ந்த சாயின்ஷா, 29, என்பவரிடம் இது குறித்து கேட்டபோது, தகராறு ஏற்பட்டுள்ளது.அதேநேரம் சமீர் பாஷா தரப்பில் 15 பேர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கைகலப்பானது. இருதரப்பும் வெவ்வேறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேசின் பாலம் போலீசார், இருதரப்பிலும் புகாரை பெற்று விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை