உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரவுடி மீது கார் மோதி கொல்ல முயற்சி?

ரவுடி மீது கார் மோதி கொல்ல முயற்சி?

சேலையூர்: ஸ்கூட்டரில் சென்ற ரவுடியை, காரால் மோதி கொல்ல முயன்றோரை போலீசார் தேடி வருகின்றனர். தாம்பரம் அடுத்த சேலையூர் காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் அஜித், 28; ரவுடி. இவர் நண்பர் சிவகுமார், 21, என்பவருடன் நேற்று, ‘ஹோண்டா டியோ’ ஸ்கூட்டரில், காமராஜபுரம் பிரதான சாலையில் சென்றார். அப்போது, பின்னால் வந்த ‘ஸ்விப்ட்’ கார், ஸ்கூட்டர் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். அப்போது, காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் இருவர், கத்தியால் வெட்ட வருவதை பார்த்து அஜித், சிவகுமார் அங்கிருந்து ஓடி தப்பினர். இதையடுத்து அந்த நபர்கள் காரில் ஏறி புறப்பட்டு சென்றனர். மேலும், அந்த நபர்கள் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது. முன்விரோதம் காரணமாக அஜித்தை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனரா என, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ