உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜென் கட்டட கலையில் காசா கிராண்ட் குடியிருப்பு

ஜென் கட்டட கலையில் காசா கிராண்ட் குடியிருப்பு

சென்னை, 'காசா கிராண்ட்' நிறுவனம், 'ஜென்' கட்டடக்கலை பாணியில், போரூரில் உருவாக உள்ள, 'காசாகிராண்ட் ஓசாகா' குடியிருப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 6.80 ஏக்கரில் உருவாகும் இந்த குடியிருப்பு வளாகத்தில், 401 பிரீமியம், இரண்டு, மூன்று, நான்கு பி.எச்.கே., வீடுகள் அமைய உள்ளன.போரூரில் தற்போது நிலவும் விலையில் பாதி விலைக்கு, அதாவது ஒரு சதுர அடிக்கு, 4,499 ரூபாய் என்ற விலையில், 105 உள்ளரங்க மற்றும் வெளியரங்க பயன்பாட்டு, பொழுதுபோக்கு வசதிகளை கொண்டதாக இக்குடியிருப்பு வடிவமைக்கப்பட்டு உள்ளது.போரூர் சந்திப்பில் இருந்து, 10 நிமிட பயண துாரத்தில் அமைந்திருக்கும் இக்குடியிருப்பு திட்டம், வளசரவாக்கம், வடபழநி, ஆலந்துார், கிண்டி போன்ற இடங்களுக்கு, எளிதில் இணைப்பு வசதியை வழங்குகிறது. மேலும் சிறப்பாக, 13,000 சதுர அடியில் அனைத்து வசதிகள் உடைய கிளப் ஹவுஸ், 9,000 சதுர அடியில்நீச்சல் குளம், பொழுதுபோக்கு, நலவாழ்வு, சமூக வாழ்க்கைக்கு உற்சாக அமைவிடமாக இருக்கும். 4.50 ஏக்கர் திறந்த வெளிப்பரப்பையும், 1.75 ஏக்கரில் மைய பூங்காவும் அமைய உள்ளது. இந்த வளாகத்தில், பொழுதுபோக்கு செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், ஜப்பானிய பாணியில் உருவாக்கப்படும் அழகான தோட்டமும் இடம்பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி