ஐ.டி., ஊழியரிடம் ரூ.10 லட்சம் மோசடி நண்பர், அவரது மனைவி மீது வழக்கு
வியாசர்பாடி, வியாசர்பாடி, சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ஜெகநாதன், 28; ஐ.டி., நிறுவன ஊழியர். இவரும், வியாசர்பாடியைச் சேர்ந்த பவித்ரன் என்பவரும் நண்பர்கள். புதிய தொழில் துவங்க ஜெகநாதனிடம் இருந்து 10.76 லட்சம் ரூபாயை, பவித்ரனும், அவரது மனைவி கேத்ரினும், கடந்தாண்டு ஜூலை மாதம் வாங்கியுள்ளனர். பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதால், கடந்த மார்ச் 16ம் தேதி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஜெகநாதன் புகார் அளித்தார். எம்.கே.பி.நகர் போலீசார் விசாரித்து, பவித்ரன், கேத்ரின் ஆகியோர் மீது, நேற்று வழக்கு பதிந்துள்ளனர்.