உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கார் வாங்கி மோசடி இருவர் மீது வழக்கு

 கார் வாங்கி மோசடி இருவர் மீது வழக்கு

கொடுங்கையூர்: கார் வாங்கி மோசடியில் ஈடுபட்ட இருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கொடுங்கையூரில் பழைய கார்கள் வாங்கி விற்கும் 'அம்மன் மோட்டார்ஸ்' நிறுவனத்தின் மேலாளர் ஆனந்த்பாபு, 37. கடந்த 2024 நவம்பரில், இவர் பணிபுரியும் நிறுவனத்தில், கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த திலீப், ராஜேஷ் கண்ணா ஆகியோர், கார் வாங்க வந்துள்ளனர். அதற்கு ஈடாக 'ராயல் என்பீல்ட்' புல்லட்டை, அம்மன் மோட்டார்ஸ் நிறுவனத்தில் விற்பனை செய்வதாகவும், மீத தொகையை தவணை முறையில் செலுத்துவதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து ஆவணங்களில் கையெழுத்திட்டு, இருவரும் வாகனங்களை மாற்றி கொண்டனர். ஆனால், திலீப் மற்றும் ராஜேஷ் கண்ணா காருக்கான தவணை தொகையை செலுத்தாத தோடு, வாங்கிய காரை மற்றொருவருக்கு விற்பனையும் செய்துள்ளனர். இது குறித்து, செப்., 17ம் தேதி, எழும்பூர் நீதிமன்றத்தில், ஆனந்த்பாபு வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் அளித்த உத்தரவை அடுத்து, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி