உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  லாக்கரில் நகை திருடிய வழக்கு :மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

 லாக்கரில் நகை திருடிய வழக்கு :மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

வேளச்சேரி: தனியார் வங்கி லாக்கர்களில் இருந்து, பெண் மேலாளர் நகை திருடிய வழக்கு, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு உள்ளது. வேளச்சேரி விரைவு சாலையில் தனியார் வங்கி உள்ளது. இங்கு மேலாளராக பணிபுரிந்தவர் பத்மபிரியா, 40. இவர் வெளிநாட்டில் வசிக்கும் வாடிக்கையாளரின் பெயரில் உள்ள லாக்கரில் இருந்த நகையை திருடி, உருக்கி விற்பனை செய்தார். புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் பத்மபிரியாவை, செப்டம்பர் மாதம் கைது செய்தனர். ஜாமினில் வெளியே வந்த இவர், கடந்த 5ம் தேதி, பர்தா அணிந்து வங்கி சென்று, 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க பிஸ்கட் மற்றும் ஒரு செயின், இரண்டு வளையல்களை, வங்கியில் விட்டு சென்றார். வேளச்சேரி போலீசாரின் விசாரணையில், மேலாளராக பணி புரிந்து நகை திருடிய பத்மபிரியா என தெரிந்தது. மேலும், தங்க பிஸ்கட் ஒரு லாக்கரும், செயின், வளையல் வேறு லாக்கர்களில் இருந்தும் திருடியதும் தெரிந்தது. இதனால், வேறு லாக்கர்களில் இருந்து நகை திருடினாரா என தெரிந்து கொள்ள, வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் கணக்குகளில் இருந்தும் பணம் திருடப்பட்டுள்ளதா என விசாரிக்க முடிவு செய்துள்ளனர். நகை உரிமையாளர்கள் புகார் அளிக்க முன்வராமல் இருந்தால், வங்கி நிர்வாகம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளது. இதனால், வழக்கு மத்திய குற்றப்பிரவு போலீசாரிடம் மாற்றப்பட்டு உள்ளது. புகார் அளிக்க தயக்கம் லாக்கிரில் பாதுகாத்து, திருடு போன நகைகளுக்கு முறையான 'பில்' வைத்திருந்ததால், வெளிநாட்டில் வசித்தவர் புகாரின்படி, பத்மபிரியா கைது செய்யப்பட்டார். வெளிநாடுகளில் இருந்தோ அல்லது வேறு விதமாகவோ, முறையாக வரி செலுத்தாமல் நகை வாங்கி இருந்தால், வருமான வரித்துறைக்கு பதில் கூற வேண்டி வரும் என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது. அடுத்தடுத்த விசாரணையில், உண்மை நிலவரம் வெளிவரும் என போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை