விஜய்க்கு பேனர் வைத்த 4 பேர் மீது வழக்கு பதிவு
கொடுங்கையூர் கரூர் பிரசார கூட்டத்தில் விஜய் பேசிய வசனங்களை, பேனர் அடித்து வைக்க முயன்ற நால்வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் நடந்த த.வெ.க., தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில், விஜய் பேசிய வசனங்களான ஆளுங்கட்சியின் அராஜகம், 10 ரூபாய் பாலாஜியின் அட்டூழியத்தால் அப்பாவி மக்கள் பலி என்ற வாசகம் அடங்கிய ஐந்து டிஜிட்டல் பேனர்களை, வடசென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் சார்லஸ் மேற்பார்வையில், நான்கு பேர் கொடுங்கையூர், எருக்கஞ்சேரி சிக்னல் அருகில் நேற்று வைக்க சென்றனர். தகவலறிந்த கொடுங்கையூர் போலீசார், அதை தடுத்து நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.