உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆம்ஸ்ட்ராங் கொலையில் சி.பி.ஐ., விசாரணை? * போலீஸ் பதிலளிக்க உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலையில் சி.பி.ஐ., விசாரணை? * போலீஸ் பதிலளிக்க உத்தரவு

சென்னை, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற உத்தரவிட கோரிய மனுவுக்கு, காவல்துறை பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், 2024 ஜூலை 5ல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ரவுடி நாகேந்திரன், அவரின் மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்பட 27 பேரை, செம்பியம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.வழக்கின் விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், செம்பியம் போலீசார் வழக்கை நியாயமாக விசாரிக்கவில்லை எனவும், சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடக்கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இம்மானுவேல் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், 'வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது' என, தெரிவிக்கப்பட்டது.மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை