உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சென்ட்ரல் - அரக்கோணம் இரவு ரயில் ஒரு பகுதி ரத்து

 சென்ட்ரல் - அரக்கோணம் இரவு ரயில் ஒரு பகுதி ரத்து

சென்னை: அரக்கோணம் ரயில்வே பணிமனையில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், சென்ட்ரல் - அரக்கோணம் இரவு 10:55 மணி ரயில், இன்றும், 6ம் தேதியில் திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது. அதேபோல், கேரள மாநிலம் பாலக்காடு ரயில் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி - மஹாராஷ்டிரா மாநிலம் புனே விரைவு ரயில் வரும் 21, 27ம் தேதிகளில், செல்லும் வழியில் 40 நிமிடங்கள் தாமதம் ஏற்படும். கர்நாடக மாநிலம் மங்களூரு - சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் ரயில் வரும் 11, 18ம் தேதிகளில் செல்லும் வழியில் 40 நிமிடங்கள் தாமதம் ஏற்படும். சென்ட்ரல் - மங்களூரு வெஸ்ட் கோஸ்ட் ரயில் வரும் 22ல், ஒரு மணி நேரம் 40 நிமிடங்களும், 23ம் தேதியில் ஒரு மணிநேரமும் தாமதம் ஏற்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை