சென்ட்ரல் - ஆவடி 4 மின்சார ரயில்கள் ரத்து
சென்னை:சென்ட்ரல் - ஆவடி தடத்தில், நான்கு மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.இது குறித்து, சென்னை ரயில் கோட்டம் வெளியிட்ட அறிக்கை:ஆவடி ரயில்வே யார்டில், மேம்பாட்டு பணி நாளை அதிகாலை 3:30 மணி வரை நடக்கிறது. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன★ சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு 11:40 மணி மின்சார ரயில் இன்று ரத்து செய்யப்படுகிறது★ சென்ட்ரல் - ஆவடி அதிகாலை 12:15 மணி ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது★ பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் இரவு 7:35 மணி இன்று ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும் ★ சூலுார்பேட்டை - சென்ட்ரல் இரவு 9:00 மணி ரயில், இன்று கொருக்குப்பேட்டை வரை மட்டுமே இயக்கப்படும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.