வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அப்பாவி
மார் 24, 2025 07:29
குளிக்க வரும் பக்தர்கள் ஆளுக்கு ரெண்டு குப்பையை எடுத்து வெளியே போட்டாலே குளம் சுத்தமாயிரும்.
பூந்தமல்லி:பூந்தமல்லியில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில், நவகிரகங்களில் செவ்வாய் தலமாக உள்ளது. கோவிலின் கிழக்குபுறம், வினை தீர்த்த குளம் உள்ளது. இக்குளத்தில் நீராடிய பின், பக்தர்கள் சுவாமியை தரிசிக்கின்றனர்.ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளம் பராமரிப்பின்றி உள்ளது. குளத்தைச் சுற்றி, குப்பை தொட்டி வைக்காததால், பிளாஸ்டிக், உணவு கழிவு குளத்தில் வீசப்படுகிறது. இதனால், தீர்த்த குளம் மாசடைந்து, நீராட முடியாமல் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
குளிக்க வரும் பக்தர்கள் ஆளுக்கு ரெண்டு குப்பையை எடுத்து வெளியே போட்டாலே குளம் சுத்தமாயிரும்.