உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்

சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்

சென்னை:கேரளா விஷு விழாவை ஒட்டி, சென்னை எழும்பூரில் இருந்து கர்நாடகாவுக்கு, சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: மங்களூரு சென்ட்ரலில் இருந்து, வரும் 6, 13ம் தேதிகளில், மாலை 4:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:30 மணிக்கு எழும்பூர் வரும். எழும்பூரில் இருந்து, வரும் 7, 14ம் தேதிகளில், மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:50 மணிக்கு மங்களூரு செல்லும். இந்த சிறப்பு ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக இயக்கப்படும். இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு துவங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி