உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை - புதுடில்லி 2 விமானங்கள் ரத்து

சென்னை - புதுடில்லி 2 விமானங்கள் ரத்து

சென்னை, புதுடில்லியில் நேற்று காலை 7:50 மணிக்கு புறப்பட்டு, காலை 10:45 மணிக்கு, சென்னை வர வேண்டிய, 'விஸ்தாரா ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம், திடீரென ரத்து செய்யப்பட்டது.அதேபோல், காலை 11:25 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் புறப்பட்டு, மதியம் 2:20 மணிக்கு புதுடில்லி செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணியர் விமானமும், ரத்து செய்யப்பட்டது.இதுகுறித்து, முன்பதிவு செய்திருந்த பயணியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வேறு விமானங்களுக்கு, டிக்கெட்டுகள் மாற்றப்பட்டன.போதிய பயணியர் இல்லாததாலும், நிர்வாக காரணங்களுக்காகவும், இந்த இரு விமானங்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை