உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சியை கண்டித்து மறியல்

மாநகராட்சியை கண்டித்து மறியல்

எம்.கே.பி.நகர் : எம்.கே.பி., நகர், 33வது வார்டில், குப்பை தேக்கம், மின்சப்ளை பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள், சாலை மறியல் செய்தனர். வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் சாலையில், நடந்த மறியலில், எம்.எல்.ஏ., சவுந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., மகேந்திரன் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்டோர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். எம்.கே.பி.நகர் உதவி கமிஷனர் மனோகரன் மற்றும் போலீசார் மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மாநகராட்சி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, 33வது வார்டில் உள்ள பிரச்னைகளை உடனடியாக சரிசெய்வதாக உறுதியளித்தபின், மறியல் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி