உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுவனை தேடும் பணியில் மீட்புப் படை

சிறுவனை தேடும் பணியில் மீட்புப் படை

சென்னை : கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து சிறுவன், ஆற்றில் தவறி விழுந்தான். அவனைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கோட்டூர்புரம் காலனியைச் சேர்ந்தவர் பாலகுண்டய்யா. இவரது மகன் சக்தி ஆதித்யா, 10. இவன் நேற்று மாலை, கோட்டூர்புரம் மேம்பாலம் அருகேயுள்ள வீராணம் குழாயின் மேல் ஏறி, நண்பர்களுடன் நடந்து சென்றான். அப்போது தவறி, பாலத்தின் கீழே செல்லும் அடையாறு ஆற்றில் விழுந்தான். வெளிச்சமின்மையால், ஆற்றில் விழுந்த சிறுவனை தேடும் பணியில், மீட்புப் படையினர் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி