மேலும் செய்திகள்
ஸ்போர்ட்ஸ் கார்னர்
19-Oct-2025
சென்னை: கோவாவில் நடைபெற உள்ள கால்பந்து தொடரில் விளையாட உள்ள சென்னையின் எப்.சி., அணி வீரர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், தேசிய அளவில் ஆடவருக்கான 'ஏ.ஐ.எப்.எப் சூப்பர் கப்' கால்பந்து போட்டி, கோவாவில் நடக்கிறது. இதில், இந்தியாவில் இருந்து 16 அணிகள் பங்கேற்க உள்ளன. இதன் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள சென்னை எப். சி., அணி வீரர்கள் விபரத்தை, அணியின் தலைமை குழு வெளியிட்டுள்ளது. புதிய பயிற்சியாளராக கிளிபோர்டு மிராண்டா நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் தலைமையில் 24 வீரர்களுடன் எப்.சி., அணி களமிறங்குகிறது. அணி விபரம்: கோல்கீப்பர்கள்: சமிக்மித்ரா, நவாஸ், மோகன்ராஜ். தடுப்பு திசை: லால்தின் புயா, அங்கித் முகர்ஜி, ராவ் தேசாய், பிரிதம் கோட்டல், விக்னேஷ், லால்தின் லியானா ரென்த்லே, ஷேக் ரஜக் அலி, கிளஸ்னர் ஜான் மனுவேல் பெரெய்ரா, ராஜ் பஸ்போர். மிட் திசை: பரூக் சௌதரி, ஜிதேந்திர சிங், மகேஷ் சிங், லால்ரின்லியானா ஹ்னாம்தே, ஜிடேஷ்வர் சிங், கார்த்திக் திருமலை, ரமன் சிங், சோலைமலை, கிங்ஸ்லி பெர்னாண்டஸ். பார்வர்ட் திசை: இர்பான், குர்கிரத் சிங், விவேக் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஐந்து மாதங்களாக பயிற்சி இல்லாமல் இருந்து திடீரென ஆடுவது எளிதல்ல. ஆறு நாட்களில் மூன்று போட்டிகள்; சவாலாக இருந்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களிடம் திறமைமிக்க வீரர்கள் உள்ளனர்; இது சென்னையின் மட்டுமல்ல, முழு இந்திய கால்பந்து வளர்ச்சியை காட்டும் வாய்ப்பு. - கிளிபோர்ட் மிராண்டா, தலைமை பயிற்சியாளர்.
19-Oct-2025