உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பக்கத்து வீட்டுக்காரர் பெயரில் பாஸ்போர்ட்சவுதி அரேபியாவில் சம்பாத்தியம்

பக்கத்து வீட்டுக்காரர் பெயரில் பாஸ்போர்ட்சவுதி அரேபியாவில் சம்பாத்தியம்

சென்னை:பக்கத்து வீட்டுக்காரர் பெயரில் பாஸ்போர்ட் எடுத்து, பல ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் டிரைவர் வேலை பார்த்து வந்தவர், நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்.விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் ராஜு, 34. இவர், தன் புகைப்படத்தை ஒட்டி, பக்கத்து வீட்டுக்காரரான சமிபுல்லாகான் என்பவரின் பெயரில், 1999ம் ஆண்டு பாஸ்போர்ட் எடுத்தார். அதை பயன்படுத்தி, சவுதி அரேபியா சென்று, அங்குள்ள ஒரு நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்த போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி, பல முறை பயணம் செய்தார். இவருடைய ஆள் மாறாட்ட மோசடி குறித்து, உள்ளூரைச் சேர்ந்த சிலர், பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ரியாத்தில் இருந்து, சென்னை வந்த கல்ப் ஏர் - வேஸ் விமானம் மூலம், ராஜு சென்னை வந்தார். குடியுரிமை சோதனையின் போது, அவர், அடுத்தவர் பெயரில் பாஸ்போர்ட் எடுத்து பயன்படுத்தி வந்தது தெரிந்தது. அவரை மடக்கிய குடியுரிமை அதிகாரிகள், பின் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் ராஜுவை கைது செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை