மேலும் செய்திகள்
உலகின் 4வது பெரிய அலுவலக சந்தையாகும் இந்தியா
10-Aug-2025
சென்னை, சென்னையின் அலுவலக இடத்துக்கான சந்தை நிலையான வளர்ச்சி காண்பதாக, முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்ச் 2026ல் சென்னையின் மொத்த அலுவலக இடங்களில், 90.50 சதவீதம் முதல் 91 சதவீதம் வரை நிரம்பியிருக்கும். தகவல் தொழில்நுட்பம், பொறியியல், உற்பத்தி துறை நிறுவனங்களின் அலுவலக இடத்தேர்வு, 2024 மார்ச் மாதத்தை விட, 2025 ஜூன் மாத நிலவரப்படி அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், சென்னையில் அலுவலக இடத்தேவை 50 லட்சம் சதுர அடியாக இருக்கும் என்ற நிலையில், பல்லாவரம் பகுதி அதில் 50 சதவீத இடம் வகிக்கும். முதல் தர அலுவலக இட சப்ளையில், ஓ.எம்.ஆர்., சாலை, தென்மேற்கு பகுதிகள் 80 சதவீத பங்கு வகிக்கின்றன. மைக்ரோ மார்க்கெட் எனப்படும் நுண்சந்தையில் தரமணி, பெருங்குடி, மவுன்ட் -பூந்தமல்லி சாலை ஆகியவை 35 சதவீதமாக உள்ளன. துரைப்பாக்கம், தரமணி, பெருங்குடி, கிண்டி, மவுன்ட் பூந்தமல்லி சாலை பகுதிகளில், வாடகையின் ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதம், கடந்த ஐந்து ஆண்டுகளில் 3 முதல் 4 சதவீதமாக உள்ளது. நாட்டின் ஆறு பெருநகரங்களின் அலுவலக இட சப்ளையில், சென்னை 8.50 சதவீத பங்கு வகிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தேசிய வீட்டு வசதி வங்கியின் தரவுகள் படி, பெங்களூருக்கு அடுத்ததாக, வீடு விலை 7 சதவீத உயர்வுடன் சென்னை, இரண்டாம் இடம் வகிக்கிறது.
10-Aug-2025