மேலும் செய்திகள்
முதல்வர் கோப்பை: மன்னர் கல்லுாரிக்கு பதக்கம்
15-Sep-2025
சென்னை, ஹரியானா மாநிலத்தில் நடந்த ஆணழகன் போட்டியில், சென்னை போலீசார் தங்கம் மற்றும் வெள்ளி வென்று அசத்தினர். ஹரியானா மாநிலம், போலீஸ் அகாடமியில், 74வது அனைத்திந்திய விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில், ஆணழகன் போட்டி, கடந்த செப்., 23ம் தேதி நடந்தது. இதில், சைதாப்பேட்டை காவல் நிலைய தலைமை காவலர் புருஷோத்தமன், 85 கிலோ எடை பிரிவில் தங்க பதக்கமும், ஆயுதப்படை தலைமை காவலர் செல்வகுமார், 65 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். பதக்கங்கள் வென்று அசத்திய இருவருக்கும், சென்னை போலீஸ் கமிஷனர் அருண், நேற்று வெகுமதி வழங்கி பாராட்டினார்.
15-Sep-2025