உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேசிய டென்னிஸ் தொடர் சென்னை மாணவி அசத்தல்

தேசிய டென்னிஸ் தொடர் சென்னை மாணவி அசத்தல்

சென்னை :தேசிய டென்னிஸ் தொடரில், 14 வயதிற்கு உட்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவில், சென்னை மாணவி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். அகில இந்திய டென்னிஸ் சங்கம், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் 14 வயதுக்கு உட்பட்ட இருபாலருக்கும், தேசிய அளவில் ஏ.ஐ.டி.ஏ., ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி, திருச்சியில் நேற்று நடந்தது. இதில், தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற சென்னை மாணவி கனிஷ்கா, இறுதி போட்டியில் மற்றொரு தமிழக வீராங்கனை அதிதியை எதிர்த்து மோதினார். இதில், 6 - 2, 6 - 1 என்ற நேர்செட்களில் அதிதியை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். அடுத்து நடந்த இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில், கனிஷ்கா, சான்வி ஜோடி, அதிதி, எஷிதா ஜோடியை எதிர்த்து மோதியது. இதில் அசத்தலாக விளையாடிய கனிஷ்கா, சான்வி ஜோடி 6 - 1, 6 - 2 என்ற செட் கணக்கில் எதிர்த்து மோதிய அதிதி, எஷிதா ஜோடியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை