சென்னை பல்கலை ஊழியர்கள் போராட்டம்
சென்னை:சென்னை பல்கலை ஊழியர்களுக்கான மே மாத சம்பளம், நேற்று வழங்காததை கண்டித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை பல்கலையில், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்களுக்கு, மே மாதத்துக்கான சம்பளம், 30ம் தேதியான நேற்று வழங்கி இருக்க வேண்டும். ஆனால், வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து அவர்கள், நேற்று, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.