உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை பல்கலை மண்டல கபடி நியூ கல்லுாரி அணி சாம்பியன்

சென்னை பல்கலை மண்டல கபடி நியூ கல்லுாரி அணி சாம்பியன்

சென்னை, சென்னை பல்கலையின் மண்டலங்களுக்கு இடையிலான கபடி போட்டியில், நியூ கல்லுாரி முதலிடத்தை பிடித்து, சாம்பியன் பட்டத்தை வென்றது. சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளை இரு மண்டலங்களாக பிரித்து, விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. அதன்படி, மண்டலங்களுக்கு இடையிலான ஆண்கள் கபடி போட்டி, ஆவடி, நாசரேத் கல்லுாரியில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. காலிறுதியில் நியூ கல்லுாரி அணி, 40 - 28 என்ற புள்ளிக்கணக்கில் ஆர்.கே.எம்., விவேகானந்தா கல்லுாரியை வீழ்த்தியது. அரையிறுதியில் சிறப்பாக விளையாடிய நியூ கல்லுாரி அணி, 58 - 17 என்ற புள்ளிக் கணக்கில், எஸ்.ஆர்.எம்., கலை கல்லுாரியை தோற்கடித்தது. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், நியூ கல்லுாரி மற்றும் டி.ஜி.வைஷ்ணவா அணிகள் எதிர்கொண்டன. அதில், 70 - 29 என்ற அதிரடி புள்ளிக் கணக்கில் நியூ கல்லுாரி அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்து, சாம்பியன் கோப்பையை வென்றது. இந்த வெற்றி காரண மாக, தென்மண்டல பல்கலை போட்டிக்கு, சென்னை பல்கலை சார்பில், நியூ கல்லுாரி மாணவர்கள் நீதிவேல், ஆன்டோ அஸ்லி, மணிவண்ணன், பெரியதுரை, சூர்ய பிரதேஷ், கிரிவேலன், பிபின் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி