உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிக்கன் கடையில் திருடியவர் கைது

சிக்கன் கடையில் திருடியவர் கைது

சாஸ்திரி நகர், திருவண்ணாமலையை சேர்ந்தவர் ரசூல், 35. சாஸ்திரி நகர் முதல் அவென்யூவில் உள்ள சிக்கன் கடையில் பணிபுரிந்து, அங்கே தங்கியுள்ளார்.கடந்த மாதம் 30ம் தேதி, புழுக்கம் அதிகமாக இருந்ததால், கடை ஷட்டரை பாதி திறந்து வைத்து துாங்கிக்கொண்டிருந்தார்.அதிகாலையில் கடைக்குள் புகுந்த நபர், கல்லா பெட்டியில் இருந்த, 4,000 ரூபாயை திருடி சென்றார்.புகாரின்படி விசாரித்த சாஸ்திரி நகர் போலீசார், அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரித்தனர்.அதில், திருவான்மியூர், ரங்கநாதபுரத்தை சேர்ந்த அந்தோணி, 21, என்பவர், திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !