உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிளாம்பாக்கம் புதிய காவல் நிலையம் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

கிளாம்பாக்கம் புதிய காவல் நிலையம் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், 18.2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள போலீஸ் நிலையத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில், சி.எம்.டி.ஏ., வாயிலாக, 18.2 கோடி ரூபாயில், 30,000 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன், காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து தினமும், 2,500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு சாதாரண நாட்களில், 50,000 பயணியரும், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், இரண்டு லட்சம் பயணியரும் வந்து செல்கின்றனர். எனவே, பயணியர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த காவல் நிலையத்தை, கொளத்துாரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இருந்தவாறு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கொளத்துாரில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சேதமடைந்த இருசக்கர வாகனங்களுக்கு மாற்றாக, மூன்று பேருக்கு புதிய இருசக்கர வாகனங்களையும் முதல்வர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புது வலிமை பெற்றேன்

உடல்நிலை காரண மாக தள்ளிப்போன கொளத்துார் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வை தந்தது. அந்த உணர்வு நீங்கி, புது வலி மையை இன்று பெற்றேன். கொளத்துார் நிகழ்ச்சி யில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காவல் நிலை யம், பெரம்பூர் மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலை பள் ளியில் கூடுதல் பள்ளி கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தேன். மேலும், 17.6 கோடி 14 ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக் கல் நாட்டினேன். நலம் விசா ரித்து அன்பை பொழிந்த அனைவருக்கும் நன்றி. - ஸ்டாலின், தமிழக முதல்வர்.

ரூ.17 கோடி பணிகளுக்கு அடிக்கல்

* சி.எம்.டி.ஏ., வாயிலாக கொளத்துாரில், 11.3 கோடி ரூபாய் செலவில், புதிய காவல் துணை ஆணையர் அலுவலகம், பெரவள்ளூர் காவல் நிலையத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு, போக்குவரத்து காவல் பிரிவு, சைபர் குற்றப்பிரிவுக்கு கட்டடம் கட்டப்பட உள்ளது * பெரம்பூர் மார்க்கெட் தெருவில் உள்ள, சென்னை பெண்கள் மேல்நிலை பள்ளியில், 9.74 கோடி ரூபாய் செலவில், 24,000 சதுர அடி பரப்பில், தரை மற்றும் மூன்று தளங்களுடன் கூடுதல் பள்ளி கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. * ரெட்டேரியில் சி.எம்.டி.ஏ., மூலம், 1.62 கோடி ரூபாய் மதிப்பில், நவீன கழிப்பிடம், ஏ.சி., உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்து நிலையம் ஆகியவை கட்டப்பட உள்ளது * கொளத்துார் தொகுதியில் பில்கிங்டன் சாலையில், ரயில்வே ஆன்ஸ்லே வாய்க்காலின் இருபுறமும், 3.27 கோடி ரூபாய் செலவில் தடுப்புசுவர் கட்டப்பட உள்ளது. * ரங்கசாமி தெரு மற்றும் லோகோ திட்டம் - 1 பிரதான சாலையில் அமைந்துள்ள விளையாட்டு மைதானங்கள் மற்றும் ஒன்பது பூங்காக்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு, 17.6 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள, 14 திட்ட பணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ