பெண்ணிடம் சில்மிஷம் ஆட்டோ ஓட்டுனர் கைது
சென்னை, தி.நகரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், 22ம் தேதி இரவு தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது மர்மநபர் ஒருவர், திடீரென அப்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு, தப்பிச் சென்றார்.இது குறித்து தேனாம்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து, தேனாம்பேட்டை போலீசார் விசாரித்தனர்.இதில், தேனாம்பேட்டை, ஆலயம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான அருண், 33, என்பவர் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.நேற்று அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.