மொபைல் போன் திருடியவரை பிடித்து கொடுத்த பொதுமக்கள்
திருவொற்றியூர், தேனி, உத்தமபாளையத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ், 19. திருவொற்றியூர் அஜாக்ஸ் பகுதியில் நடந்து வரும் அரசு கல்லுாரி கட்டுமான பணியில் மேற்பார்வையாளர்.நேற்று முன்தினம் மதியம், கட்டட சுவற்றின்மீது, தன் மொபைல் போனை வைத்து, கட்டுமான பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார்.அப்போது, மர்ம நபர் ஒருவர், மொபைல் போனை திருடிக் கொண்டு ஓடியுள்ளார். சுதாரித்த புஷ்பராஜ், கட்டுமான ஊழியர்கள், பொதுமக்கள் உதவியுடன், மர்ம நபரை விரட்டி பிடித்து, திருவொற்றியூர் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், பிடிப்பட்டவர் திருவொற்றியூர் பட்டினத்தார் கோவிலைச் சேர்ந்த சக்திவேல், 22, என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின், நேற்று அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.திருடிய இருவர் கைது வியாசர்பாடியை சேர்ந்தவர் கார்த்திக், 19; உணவக ஊழியர். கடந்த, 2ம் தேதி காலை, உணவகத்தில், தன் மொபைல் போனை சார்ஜ் போட்டிருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது, காணவில்லை. வியாசர்பாடி போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து, திருட்டில் தொடர்புடைய, கிண்டியைச் சேர்ந்த தீபக், 20, வியாசர்பாடியைச் சேர்ந்த தனுஷ், 21, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.***