பாலத்தில் பைக் மோதி விபத்து கல்லுாரி மாணவர் உயிரிழப்பு
பள்ளிக்கரணை, :பெருங்குடி, கல்லுக்குட்டையை சேர்ந்தவர் மோனிஷ், 19. இவர், ஜல்லடியன்பேட்டையில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்தார்.நேற்று மதியம், கல்லுாரியில் இருந்து தன் நண்பன் கார்த்திக் என்பவருடன் வேளச்சேரி - -தாம்பரம் பிரதான சாலையில், சந்தோசபுரம் நோக்கி சென்றார்.மேடவாக்கம் மேம்பாலம் மீது அதிவேகமாக சென்றபோது, பாலத்தின் ஓரத்தில் குவிந்துள்ள மண் குவியலில் சறுக்கி, கட்டுபாட்டை இழந்த டூ - வீலர் பால பக்கவாட்டு சுவரில் மோதியது.இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த மோனிஷ், சம்பவ இடத்திலேயே பலியானார். கார்த்திக்கிற்கு கால், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, பலத்த காயத்துடன் பாலத்தின் மீது கிடந்தார்.இதைபார்த்த வாகன ஓட்டிகள், பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கார்த்திக்கை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மோனிஷ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து வி8சாரிக்கின்றனர்.