உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இருவேறு விபத்தில் கல்லுாரி மாணவர்கள் பலி

இருவேறு விபத்தில் கல்லுாரி மாணவர்கள் பலி

பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் அருகே தண்டலம், செட்டிபேடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் பிரசாத், 19; இன்ஜினியரிங் மாணவர். நேற்று, 'யமஹா ஆர்15' பைக்கில், தன் நண்பர் கிருஷ்ணசாமி, 20, என்பவரை அழைத்துக்கொண்டு, சென்னை - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி நோக்கிச் சென்றார்.செம்பரம்பாக்கம், பழஞ்சூர் பகுதியை கடந்தபோது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி பைக் மீது மோதியது. இதில், லாரியின் அடியில் சிக்கிய மோகன் பிரசாத், சம்பவ இடத்திலேயே பலியானார். கிருஷ்ணசாமி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.விபத்து ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி ஓட்டுநர் கோபி, 29, என்பவரை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.l பொன்னேரி, அன்னை அவென்யூ பகுதியைச் சேர்ந்த குமார், 48, என்பவரது மகள் ஜோஷிதா, 24; எம்.டெக்., படித்து வந்தார்.நேற்று மாலை, பொன்னேரி - செங்குன்றம் சாலை வழியாக 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் வந்தார். பொன்னேரி, மூகாம்பிகை நகர் அருகே, பின்னால் வந்த லாரி ஒன்று ஜோஷிதாவின் ஸ்கூட்டர் மீது மோதியது.இதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி, அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலின்படி, பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை பிடித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ