உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வண்ண மீன் வர்த்தக மையம் அடுத்த மாதம் திறப்பு: சேகர்பாபு

வண்ண மீன் வர்த்தக மையம் அடுத்த மாதம் திறப்பு: சேகர்பாபு

வில்லிவாக்கம், ''வில்லிவாக்கத்தில் வண்ண மீன்கள் வர்த்தக மையம், அடுத்த மாதம் முதல் வாரம் அல்லது 10ம் தேதிக்குள் திறக்கப்படும்'' என, அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எனும் சி.எம்.டி.ஏ., சார்பில், வண்ண மீன் வர்த்தக மையம், வில்லிவாக்கத்தில் கட்டப்பட்டு வருகிறது. இறுதிக்கட்டத்தில் நடந்து வரும் பணிகளை ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, துறை அதிகாரிகளுடன் நேற்று பார்வையிட்டு, நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சி.எம்.டி.ஏ., சார்பில், சென்னையில் பூங்கா, உடற்பயிற்சி கூடம், குடியிருப்புகள் என, மொத்தம் 282 பணிகளை மேற்கொண்டு, அதில் 25 பணிகள் முடிவுற்றுள்ளன. அந்த வரிசையில், அரசு சார்பில் முதல் முறையாக வில்லிவாக்கத்தில் கட்டி வரும் கொளத்துார் வண்ண மீன் வர்த்தக மையம், அடுத்த மாதம் முதல் வாரத்தில் அல்லது 10ம் தேதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். திரு.வி.க., நகர் மற்றும் பெரியார் நகர் பேருந்து நிலையங்களை தொடர்ந்து, அம்பத்துார் பேருந்து நிலையமும், இம்மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். அதேபோல், ஆர்.கே., நகர் பேருந்து நிலையமும், அடுத்த மாதம் இறுதிக்குள் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி