மேம்பாலங்களில் அமைத்த வண்ண விளக்குகள் அவுட்
சென்னை,சென்னையில் உள்ள மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகளில், பல வண்ணங்களில் ஒளிரூட்டும் வண்ண விளக்குகள் அமைத்து அழகுப்படுத்த, மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, 33.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.பின், ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, 15 மேம்பாலங்கள், ஒரு ரயில்வே மேம்பாலம், 16 சுரங்கப் பாலம் மற்றும்ஐந்து பாதசாரிகள் சுரங்கப்பாதைகளில், பல வண்ணங்களில் ஒளிரூட்டும் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டன.மாநகராட்சியின் மோசமான பராமரிப்பு காரணமாக, அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே, அவை எரியவில்லை.குறிப்பாக ராயப்பேட்டை மருத்துவமனை அருகே உள்ள மேம்பாலம், ராதாகிருஷ்ணன் சாலை மேம்பாலங்களில் அமைக்கப்பட்ட வண்ண விளக்குகள் எரியவில்லை.ஒரு திட்டத்தை அமல்படுத்துவதில் மாநகராட்சி காட்டும் ஆர்வம், அவற்றை முறையாக பராமரிப்பதில்லை என்பதற்கு, இதுவே ஒரு சான்று.சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்திடம், வண்ண விளக்குகளை சீரமைத்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.