உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடு ஒப்படைக்காத நிறுவனம் ரூ.5 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

வீடு ஒப்படைக்காத நிறுவனம் ரூ.5 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

சென்னை,திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தாலுகா, திருவேற்காடு பகுதியில், 'வி.ஜி.என்., புராப்பர்ட்டீஸ் டெவலப்பர்ஸ்' நிறுவனம், அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்துகிறது.அதில் வீடு வாங்க, 2015 மார்ச் மாதம், பிரசன்னா என்பவர் முன்பதிவு செய்தார். தொடர்ந்து, வீட்டுக்கான விலை தொகையை, அவர் படிப்படியாக செலுத்தி வந்தார்.இதில், 2017ல் வீட்டை ஒப்படைப்பதாக கட்டுமான நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், அந்த குறிப்பிட்ட காலத்தில், அந்நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை. இதற்கிடையே, வீடு வாங்க பணம் செலுத்திய பிரசன்னா, 2015 ஆக., மாதத்தில் இறந்துவிட்டார். அவரது வாரிசான பிரமோத் என்பவர், வீட்டுக்கான தவணை தொகையை செலுத்தி வந்துள்ளார்.இந்நிலையில், குறித்த காலத்தில் கட்டுமான நிறுவனம் வீடு ஒப்படைக்காதது குறித்து, ரியல் எஸ்டேட் ஆணையத்தில், பிரமோத் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர் என்.உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு: ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில், கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்காதது உறுதியாககிறது. இதில் தாமதமானால், இழப்பீடு தருவது குறித்து ஒப்பந்தத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே, குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்காமல், அலைக்கழித்த கட்டுமான நிறுவனம், ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு, ஒரு லட்சம் ரூபாய் வழக்கு செலவுக்காக மனுதாரருக்கு அளிக்க வேண்டும்.இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து, 90 நாட்களுக்குள் இழப்பீட்டை அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !