புகார் பெட்டி :பூந்தமல்லி நகராட்சியில் குப்பை தொட்டி தேவை
பூந்தமல்லி நகராட்சியில் குப்பை தொட்டி தேவை
பூந்தமல்லி நகராட்சியின் 21 வார்டுகளில், 80,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்பு பகுதிகளில், நகராட்சி நிர்வாகம் சார்பில், போதிய அளவில் குப்பை தொட்டிகள் வைக்கவில்லை.இதனால், வைத்தீஸ்வரன் கோவில் குளம், வரதராஜ பெருமாள் கோவில் குளம், நுாலகம், பேருந்து நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதியின் பல இடங்களில், சாலையோரம் குப்பை கொட்டப்படுகிறது.குப்பையில் உள்ள பிளாஸ்டிக் கவர்கள் காற்றில் அடித்து செல்லப்படுவதால், மாசு ஏற்படுகிறது. பூந்தமல்லி நகராட்சியின் அனைத்து வார்டு பகுதிகளிலும் போதிய குப்பை தொட்டிகள் அமைக்க வேண்டும்.- க. துவாரபாலகன், பூந்தமல்லி.