புகார் பெட்டி வசந்தம் காலனி பூங்கா பராமரிப்பின்றி மோசம்
வசந்தம் காலனி பூங்கா பராமரிப்பின்றி மோசம்
அண்ணா நகர் மண்டலம், 95வது வார்டில் வசந்தம் காலனி இரண்டாவது தெருவில், சிறுவர் பூங்கா உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், தனியார் கல்லுாரி மாணவர்களின் பங்களிப்பில், செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டது. பூங்கா, நீருற்று படுமோசமான நிலையில் உள்ளது.நடைபாதைகள் சேதமடைந்து, விளையாட்டு உபகரணங்களும் துருப்பிடித்து கிடப்பதால், பூங்காவை பயன்படுத்த முடியவில்லை. பல மாதங்களாக துாய்மை பணி செய்யாமல் இருப்பதால், மரக்கிளைகள் உடைந்து, காய்ந்த இலைகள் குவிந்து படுமோசமாக காட்சியளிக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கோகுல்நாத், அண்ணா நகர்.