உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விமான பயணியருக்கு சலுகை

விமான பயணியருக்கு சலுகை

சென்னை, தீபாவளி மற்றும் பண்டிகை காலத்தையொட்டி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், கட்டண சலுகை அறிவித்துள்ளது.அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னையில் இருந்து கொச்சி, பெங்களூரு, குவஹாத்தி, விஜயவாடா, ஹைதராபாத் உள்ளிட்ட வழித்தடங்களில், வரும் 27ம் தேதி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிக்க 'புக்கிங்' செய்வோருக்கு சலுகை கட்டணமாக 1,606 ரூபாய் தரப்படுகிறது.அதேபோல், ஏர் இந்தியா இணையதளத்தில் 'புக்கிங்' செய்வோருக்கு 1,456 ரூபாய் சலுகை கட்டணத்தில் பயணம் செய்யலாம். இந்த, சலுகை கட்டண பயணத்தை நவ., 1 முதல் டிச., 10ம் தேதி வரை எந்த நாட்களில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்த சலுகை கட்டணத்தில் பயணிக்கும் பயணியர், 3 கிலோ எடை மதிப்புள்ள லக்கேஜ் மட்டுமே எடுத்து செல்ல முடியும். கூடுதலாக எடுத்துச் செல்வதற்கு தனிக் கட்டணம் செலுத்த வேண்டும். மற்ற சில நிபந்தனைகளும் உண்டு.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஜெய்ப்பூருக்கு நேரடி விமானம்சென்னையில் இருந்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் இடையேயான தினசரி நேரடி விமான சேவையை, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், நவ., 1ம் தேதி முதல் துவங்குகிறது. இதில், ஏ - 320 வகை விமானங்கள் இயக்கப்பட உள்ளது.சென்னையில் இருந்து தினசரி மாலை 6:45 மணிக்கு புறப்படும் விமானம், ஜெய்ப்பூருக்கு இரவு 9:15 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து தினமும் இரவு 9:50 மணிக்கு புறப்படும் விமானம், அதிகாலை 12:25 மணிக்கு சென்னையை வந்தடையும்.

வெடிகுண்டு மிரட்டல்

சிங்கப்பூரில் இருந்து நேற்று மதியம் 12:46 மணிக்கு, சென்னை வந்தடைந்த ஏர் இந்தியா விமானம், ஜெய்ப்பூரில் இருந்து சென்னைக்கு, நேற்று காலை வரும் இண்டிகோ விமானம், சென்னையில் இருந்து நள்ளிரவு 1:40 மணிக்கு, பெங்களூரு புறப்படும் விமானங்களின் விமான நிறுவன தலைமையகத்துக்கு இ - மெயில் வாயிலாக, வெடிகுண்டு மிரட்டல் வந்தது.விமான நிறுவனங்கள், உடனடியாக சம்பந்தப்பட்ட சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு, அவசர தகவல் தெரிவித்தனர். பின், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், விமானங்கள் மற்றும் விமான நிலையத்தில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. விசாரனையில், 'டார்க் நெட்' வாயிலாக மூன்று நிறுவனத்துக்கும் ஒரே நபர் மிரட்டல் விடுத்திருக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை