உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரும்பாக்கத்தில் தேங்கும் குப்பையால் நெரிசல்

அரும்பாக்கத்தில் தேங்கும் குப்பையால் நெரிசல்

அரும்பாக்கம்:எம்.எம்.டி.ஏ., காலனியில் தேங்கும் குப்பையால் சீர்கேடு நிலவுவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி அருகில், சிட்கோ தெரு, பசும்பொன் தெரு உள்ளன. கோடம்பாக்கம், சூளைமேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து வருவோர், இத்தெருக்களின் வழியாக கடந்து வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு சென்று வருகின்றனர். எந்த நேரமும் போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில், சிலர் அத்துமீறி சாலையோரங்களில் குப்பையை கொட்டி வருகின்றனர். இதனால், சாலையில் பாதி அளவுக்கு குப்பை நிறைந்திருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது . தவிர இச்சாலையில் இருபுறங்களிலும் மீன் கடைகளை நடத்தி வருவதால் இப்பகுதியில் முழுவதும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து தெருக்களில் தேங்கிள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை