உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கமிஷனருக்கு கருப்பு கொடி காட்ட வந்த காங்., நிர்வாகி கைது

கமிஷனருக்கு கருப்பு கொடி காட்ட வந்த காங்., நிர்வாகி கைது

சென்னை :சாலை அமைப்பதில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, கமிஷனருக்கு கருப்பு கொடி காட்ட வந்த காங்கிரஸ் நிர்வாகி அப்ரோஸை, போலீசார் கைது செய்தனர். வேப்பேரி, சடையப்பன் தெருவைச் சேர்ந்தவர் அப்ரோஸ்; இவர் காங்கிரஸ் கட்சி தகவல் அறியும் சட்ட பிரிவில் மாநில செயலர். அவரது வீடு அமைந்துள்ள தெருவில், சாலை மிகவும் மோசமாக உள்ளதால், அவற்றை சீரமைக்கும்படி, 58வது வார்டு உதவி பொறியாளரிடம் கோரிக்கை வைத்து உள்ளார். இது சம்பந்தமாக பேச்சில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அப்ரோஸ், மாநகராட்சி உதவி பொறியாளரை மிரட்டி உள்ளார். இதுகுறித்து மாநகராட்சி உதவி பொறியாளர் பெரியமேடு காவல் நிலையத்திலும், அப்ரோஸ், உதவி பொறியாளர் மீது வேப்பேரி காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இந்நிலையில், தன் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, போலீஸ் கமிஷனர் அருணுக்கு கருப்பு கொடி காட்ட, அப்ரோஸ் முயன்றார். அவரை, வேப்பேரியில் போலீசார் வழிமறித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அப்ரோஸ், வேப்பேரி காவல் நிலைய பழைய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை