உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செட்டி தோட்டம் நகர்ப்புற குடியிருப்பு ரூ.45 கோடி மதிப்பீடில் கட்டுமான பணி

செட்டி தோட்டம் நகர்ப்புற குடியிருப்பு ரூ.45 கோடி மதிப்பீடில் கட்டுமான பணி

ராயபுரம்:ராயபுரம், செட்டி தோட்டம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதில், 200 சதுரடியில், மூன்று மாடி கட்டடத்தில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்தன.இக்கட்டடத்தின் பெரும்பாலான இடங்களில் கூரை விரிசல் விழுந்து, மோசமான நிலையில் காட்சியளித்தது. இதையடுத்து அபாயகரமான குடியிருப்புகளை இடித்து விட்டு, புதிய கட்டடங்களை கட்ட, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவெடுத்தது. இதற்காக 2023ல் குடியிருப்புகள் இடிக்கப்பட்டன.புதிதாக, 45.36 கோடி ரூபாய் செலவில், தலா 430 சதுரடியில், 243 வீடுகள் கொண்ட 9 மாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.இதில் லிப்ட், தெருவிளக்குகள், மழைநீர் சேகரிப்பு திட்டம், தார்ச்சாலை, தீயணைப்பான் வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அவர்களது வசதிகளுக்கு ஏற்ப குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.தற்போது கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்தாண்டு அக்டோபர் மாதத்திற்குள் பணிகள் முடிவடையும் என, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை