முதல்வர் படைப்பகம் கட்டுமான பணி துவக்கம்
மடிப்பாக்கம்:மடிப்பாக்கத்தில், அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ - மாணவியர் பயனடையும் நோக்கில், 'முதல்வர் படைப்பகம்' அமைப்பதற்கான கட்டுமானப் பணி, நேற்று பூஜையுடன் துவங்கப்பட்டது. பெருங்குடி மண்டலம், 188வது வார்டு, மடிப்பாக்கத்திற்கு உட்பட்ட மயிலை பாலாஜி நகர், தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையை ஒட்டி, மாநகராட்சி மூலதன நிதி ரூபாய் 4.72 கோடியில், 'முதல்வர் படைப்பகம்' கட்டடம் கட்டும் பணியை, நேற்று காலை சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் துவக்கி வைத்தார். இது, திறந்தவெளி வாகன நிறுத்தம் வசதியுடன், 2,427 சதுர அடி பரப்பளவில், இரு தளங்களுடன் அமைகிறது. கீழ்தளத்தில் கழிப்பறை, கலந்தாய்வு கூடம், பல்நோக்கு அறைகளும், மேல்தளத்தில், நுாலகம் மற்றும் இணைய வசதியுடன் மின் நுாலகமும் அமையவுள்ளன.