உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கன்டெய்னர் லாரிகள் பார்க்கிங் அணுகு சாலையில் ஆபத்து

கன்டெய்னர் லாரிகள் பார்க்கிங் அணுகு சாலையில் ஆபத்து

மணலி: மணலி விரைவு சாலையின், அணுகு சாலையில் கன்டெய்னர் லாரிகள் பார்க்கிங் செய்யப்பட்டிருப்பதால், பர்மா நகர் மக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மணலி மண்டலம், 16வது வார்டு, பர்மா நகரில் 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், பர்மா நகர் இணைப்பு தார்ச்சாலை, உயர்மட்ட மேம்பாலத்தை கடந்து, அணுகு சாலையில் 100 மீட்டர் துாரம் பயணித்து, மணலி விரைவு சாலைக்கு வர வேண்டியுள்ளது. இந்நிலையில், 100 மீட்டர் துாரமுள்ள அணுகு சாலையில், 30க்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள், இருபக்கமும் மாதக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, உயர்மட்ட பாலத்தில் இருந்து, அணுகு சாலைக்கு வரும் மக்கள் எதிர் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் கவனித்து, போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், கன்டெய்னர் லாரிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மீண்டும், நிறுத்தாதபடி கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை